தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   559


இளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை ஆக்க மென்றா
இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்று
அன்ன பிறவும் அதன்பால என்மனார். 

இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. 

(இ-ள்.)    வண்ணம்.....விடுதல் என்று - வண்ணம் முதலாகப் பற்று
விடுதல்   ஈறாகச்   சொல்லப்பட்ட  பொருள்களும்,  அன்ன  பிறவும்
அதன்பால   என்மனார்  -  அவை  போல்வன  பிற  பொருள்களும்
ஐந்தாம் வேற்றுமைத் திறத்தன என்று கூறுவர் புலவர் எ-று. 

வண்ணம்,     வெண்மை கருமை முதலியன. வடிவு, வட்டம் சதுரம்
முதலியன.  அளவு,  நெடுமை  குறுமை  முதலியன.  சுவை,  கைப்புப்
புளிப்பு முதலியன. நாற்றம், நறுநாற்றம் தீநாற்றம் என்பன. 

(எ-டு.)  காக்கையிற்கரிது களம்பழம் - ‘இதனின்’ என்பது, காக்கை;
‘இற்று’ என்பது கரிது; ‘இது’ என்பது களம்பழம். இதனின் வட்டம் இது,
இதனின்  நெடிது  இது, இதனின் தீவிது இது, இதனின் தண்ணிது இது,
இதனின்  வெய்யது  இது,  இதனின்  நன்று  இது, இதனின் தீது இது,
இதனின்  சிறிது  இது,  இதனின்  பெரிது  இது, இதனின் வலிது இது,
இதனின்  மெலிது  இது,  இதனின்  கடிது  இது, இதனின் முதிது இது,
இதனின்  இளைது  இது,  இதனின்  சிறந்தது இது, இதனின் இழிந்தது
இது,  இதனின்  புதிது  இது,  இதனின் பழைது இது, இவனின் இலன்
இவன், இவனின் உடையன் இவன், இதனின் நாறும் இது, இதனின் பல
இவை,  இதனின்  சில  இவை.  இவற்றிற்கு  இரு  வகைப் பொருவும்
விரிக்க. 

அச்சம்  - கள்ளரின் அஞ்சும். ஆக்கம் - வாணிகத்தின் ஆயினான்;
‘கோட்டிற்  செய்த கொடிஞ்சி நெடுந்தேர்’ (பொருந.163) என்பதும் அது.
தீர்தல்-ஊரின் தீர்ந்தா
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:29:23(இந்திய நேரம்)