தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   560


ன்;  ‘தலையின்  இழிந்த  மயிர்  அனையர்’  (குறள்.964) என வரும்.
பற்று விடுதல் - ‘காமத்திற் பற்று விட்டான்’ என வரும். 

‘அன்ன     பிறவும்’ என்றதனான்,  அவனின்  அளியன் அவன்,
அதனிற்  சேய்த்து இது, இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்து
உற்றான். (குறள்.539) என்பன போல்வன கொள்க. 17) 

ஆறாம் வேற்றுமையின் பொருள்.

80. ஆறா குவதே,
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. 

இது, முறையானே ஆறாவது இப்பொருட்கண் வரும் என்கின்றது. 

(இ-ள்.) அது  எனப் பெயரிய வேற்றுமைக்  கிளவி  ஆறாகுவதே
-மேல் அது   எனப்   பெயர்   கொடுத்து  ஓதப்பட்ட  வேற்றுமைச்
சொல் ஆறாவதாம்;     அது-அவ்வேற்றுமைச்சொல்,     தன்னினும்
-ஒரு பொருளினது    உடைமைப்    பொருளாகி நிற்கும் தன்னோடு
ஒற்றுமையுடைய    பொருளானும்,    பிறிதினும்-ஒரு   பொருளினது
உடைமைப்  பொருளாய்  நிற்கும்  தன்னின் வேறாகிய பொருளானும்,
‘இதனது இது’ எனும்-‘இப்பொருளினுடையது இப்பொருள்’ என்பது பட
நிற்கும், அன்ன கிளவிக் கிழமைத்து - அன்ன பொருளான் தோன்றும்
கிழமையைப் பொருளாக உடைத்து, எ-று. 

ஈண்டுத் ‘தன்’ என்றது. உருபு ஏற்கும் பொருளை. ‘அன்ன’ என்றார்.
‘இதன  இவை’  என்னும்  பன்மை உருபும், ‘ஆகும்’ என்னும் ஒருமை
உருபும் அடங்குதற்கு. 

(எ-டு.) சாத்தன ஆடை, ‘தனாது வெள்வேல், யானை
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:29:34(இந்திய நேரம்)