Primary tabs

மைப்பொருட்கண் தோன்றுஞ் சொல் எல்லாம், ஆறன் பால என்மனார்
புலவர் - ஆறாம் வேற்றுமைத் திறத்தன என்று கூறுவர் புலவர்,
எ-று.
(எ-டு.) 1. எண்ணது குப்பை-இஃது, ஒன்றுபல குழீஇய தற்கிழமை. 2.
படையது குழாம் - இது, வேறு பல குழீஇய தற்கிழமை. 3. சாத்தனது
இயற்கை, நிலத்தது அகலம் - இவை இயற்கைக் கிழமை. 4. சாத்தனது
நிலைமை, சாத்தனது இல்லாமை-இவை நிலைக்கிழமை. இந்நான்கும்
ஒன்றியற்கிழமை.
ஒரு பொருளின் ஏகதேசம் என்று அறிவித்தற்கு ‘ஒரு வழி உறுப்பு’
என்றார். அவை யானையது கோடு, புலியது உகிர் - இவை உறுப்பின்
கிழமை.
செயற்கையாவது, தன் தன்மை திரிந்து வேறொரு தன்மை ஆதல்;
அவை சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு. முதுமைக் கிழமை:
அரசனது
முதுமை, அரசனது முதிர்வு. இஃது அறிவின் முதிர்ச்சி
என்பது அறிவித்தற்கு இளமை கூறாராயினார். வினைக் கிழமை:
சாத்தனது வினை, சாத்தனது செலவு. இவை, மெய் திரிந்து ஆய
தற்கிழமை. உடைமைக் கிழமை: சாத்தனது உடைமை, சாத்தனது
தோட்டம். முறைமைக் கிழமை: மறியதுதாய், மறியது தந்தை. கருவிக்
கிழமை: இசையது கருவி, வனை கலத்தது திகிரி. துணைக் கிழமை:
அவனது துணை, அவனது இணங்கு. கலமாவது,
ஓலை. நிலத்தது ஒற்றிக்கலம், சாத்தனது விலைத் தீட்டு. இஃது, இரு
பொருட்கு உரிமை உடைமையின், உடைமையின் வேறாயிற்று.
முதற்கிழமை: ஒற்றியது முதல், ஒ