Primary tabs

ஒற்றியது பொருள். தெரிந்து மொழிச்செய்தி: தெரிந்து மொழியான்
செய்யப்படுதலின் தெரிந்து மொழிச் செய்தி ஆயிற்று. கபிலரது பாட்டு.
இது ‘பாரியது பாட்டு’ எனவும் நிற்றலின் இரு பொருட்கு உரியதாம்.
பரணரது பாட்டியல். இதுவும் அது. இவை பொருட்பிறிதின் கிழமை.
வெள்ளியது ஆட்சி. இது காலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சி - காட்டது
யானை: இது பொருட்பிறிதின் கிழமை, யானையது காடு - இது
நிலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால்
தற்கிழமையுமாம்.
‘அன்ன பிறவும்’ என்றது, எட்சாந்து, கோட்டு நூறு; இவை முழுதுந்
திரிந்தன. சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு,
சொல்லது பொருள். இவை சிறிது திரிந்தன. (19)
ஏழாம் வேற்றுமையின் பொருள்
82.
ஏழா குவதே;
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.
(இ-ள்.)
கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஏழாகுவதே-மேல்
கண் என்று பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல்
ஏழாவதாம்; அது வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் அனை
வகைக் குறிப்பின் தோன்றும்-அது வினை செய்யாநிற்றலாகிய
இடத்தின்கண்ணும், வினை நிகழாது வரையறை உடையதொரு
நிலமாகிய இடத்தின்கண்ணும், வினை நிகழாது வரையறைப்பட்டு
நிற்கும் காலமாகிய இடத்தின்கண்ணும்