தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   573


எ-று. 

(எ-டு.) குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கண்
சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான்-என வரும். 

இது, முதல் சினை  அதிகாரத்தின்  இலக்கணம்  அல்லா  மரூஉக்
கூறினார், இது, வேறுபல குழீஇய படை முதலியவற்றிற்கும் ஒக்கும். (7) 

ஒடு உருபு உயர்ந்த பொருள் உணர்த்தும் பெயர்வழி வருதல்

91. ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே. 

இது, மூன்றாவதன்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. 

(இ-ள்.)  ஒரு  வினை  ஒடுச்  சொல்  -  ‘அதனோடியைந்த  ஒரு
வினைக் கிளவி’ (75) என மூன்றாவதற்கு ஓதிய ஒருவினை  ஒடுச்சொல்,
உயர்பின்   வழித்து-உயர்ந்த   பொருளை  உணர்த்தும்  பெயர்வழித்
தோன்றும், எ-று. 

(எ-டு.)     அரசனோடு  இளையர்  வந்தார் - என வரும். இஃது
உயர்பொருளும் இழிபொருளும் பற்றி மயங்கி வருதலின், ஈண்டுக் கூறி,
இழிபொருளை விலக்கினார். 

சாத்தனொடு கொற்றன் வந்தான்  என,  உயர்பில்வழி  எண்ணொடு
வந்தது. 

குலம், தவம், கல்வி,  வினை,  உபகாரம்  முதலியவற்றான்  உயர்பு
கொள்க. 

‘நாயொடு நம்பி வந்தான்’ என்றாற் போல்வன(வற்றில்) இழிபொருட்
கண்ணும்   ஒரு   வினை   ஒடுச்சொல்  வந்ததாலெனின்,  யாதானும்,
ஓராற்றான் அதற்கு உயர்புண்டாயின் அல்லது அவ்வாறு கூறார்; கூறுப
வாயின்,     அஃது     ‘ஒருவினை     ஒடுச்சொல்’    எனப்படாது.
‘கைப்பொருளொடு  வந்தான்’  என்றாற்  போலப்  பிறிதொரு பொருள்
தந்த ஒடு அது, ‘பொருள் உண்டாக.
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:31:58(இந்திய நேரம்)