தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   574


வந்தான்’ என்றலின். (8) 

ஏதுப்பொருள் மூன்றாவதன்கண்ணும் ஐந்தாவதன் கண்ணும் வருதல்

92. மூன்றனும் ஐந்தனுந் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கோ ரனைய என்மனார் புலவர். 

இது, மூன்றாவதற்கும்   ஐந்தாவதற்கும்   ஏது   ஒத்த   கிழமைய
என்கின்றது. 

(இ-ள்.)   மூன்றனும்  ஐந்தனும்  தோன்றக்  கூறிய  -  மூன்றாம்
வேற்றுமைக்   கண்ணும்   ஐந்தாம்  வேற்றுமைக்கண்ணும்  விளங்கச்
சொல்லப்பட்ட, ஆக்கமொடு  புணர்ந்த  ஏதுக்  கிளவி-ஆக்கத்தொடு
கூடிய ஏதுச்சொல், நோக்கு ஓரனைய என்மனார் புலவர் - அவ்வேதுப்
பொருண்மையை  நோக்கும்  நோக்கு  ஒரு  தன்மைய என்று கூறுவர்
புலவர். எ-று. 

(எ-டு.) வாணிகத்தான் ஆயினான், வாணிகத்தான்  ஆய  பொருள்;
வாணிகத்தின் ஆயினான், வாணிகத்தின் ஆய பொருள்-என வரும். 

எனவே, ஞாபக  ஏதுவின்  கண்  வரும்  இன்னும்  ஆனும்  ஒத்த
உரிமை இல என்பது பெற்றாம். இஃது உருபு மயங்கிற்று. (9) 

நோக்கு அல் நோக்கத்திற்கு ஏதுவும் செயப்படுபொருளும் ஒத்த
உரிமைய ஆதல்

93. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ்
இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும். 

இது நோக்கல் நோக்கத்திற்கு  ஏதுவுஞ் செயப்படுபொருளும்  ஒத்த
உரிமைய என்கின்றது. 

(இ-ள்.)      இரண்டன்      மருங்கின்      நோக்கு     அல்
நோக்கம்-இரண்டாவதற்கு   உரித்தாக   ஓதிய  கண்ணான்  நோக்கும்
நோக்கம்  அன்றி  மனத்தான்  நோக்கும்  நோக்கம்,  அவ்விரண்டன்
மருங்கின்  ஏதுவும்  ஆகும்-அம்மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரிய
ஏதுப் பொ
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:32:10(இந்திய நேரம்)