தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   578


மயின்.    ‘யானைக் காடு’  என்பது உறைநிலப்பெயர் முன் மொழியாய்
வருதலின்,  ‘யானைக்கண்  காடு’ என ஏழனுருபு விரியாதாயிற்று. இஃது
உருபும் பொருளும் மயக்கம். (15) 

கொடைப்பொருளில் நான்காவதும் ஆறாவதும் மயங்கல்

100. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
அப்பொருள் ஆறற் குரித்தும் ஆகும். 

இது, நான்காவதன் பொருள் ஆறாவதற்குச் செல்லும் என்கின்றது. 

(இ-ள்.)   குத்தொக வரூஉம் கொடை எதிர் கிளவி-நான்கன் உருபு
தொக   வரும்   கொடையை   விரும்பி  மேற்கோடலை  உணர்த்தும்
தொகைச்  சொல்லினது,  அப்பொருள்  -  அக்கொடை  எதிர்தலாகிய
அப்பொருண்மை,  ஆறற்கு  உரித்தும்  ஆகும்-ஆறாம் வேற்றுமைக்கு
உரித்துமாம், எ-று. 

(எ-டு.) நாகர் பலி என்பது ‘நாகர்க்கு நேர்ந்த பலி,  நாகரது  பலி’
என விரியும்.   ‘நாகர்க்கு   நேர்ந்த   பலி’   எனவே,  பிறர்க்காகாத
பலி அவருடைமை ஆயிற்றாதலின்,  ஆறாவதும்   உரித்தாகப்பெற்றது.
‘சாத்தற்கு  நேர்ந்த சோறு’ என்புழி அது பிறர்க்கும் ஆதலின், ஆண்டு
ஆறாவது ஏலாது. தெய்வம் அல்லாதாரினும் சிறந்தார்க்கு நேர்ந்ததேல்,
ஆண்டும் ஆறாவதும் வரும் என்று உணர்க. (16) 

அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கல்

101. அச்சக் கிளவிக் கைந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயி னான. 

இஃது ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)   அச்சக்கிளவிக்கு-அச்சப்பொருள்மேல் வரும் சொல்லிற்கு,
ஐந்தும்  இரண்டும்  எச்சம்  இல  - ஐந்தாவதும் இரண்டாவதும் ஒத்த
உரிமைய, பொருள் வயினான - வேற்றுமை தொக அவற்றின் பொருள்
நின்றவழி, எ-று. 

(எ-டு.) பழி அஞ்சும் என்பது ‘பழியின் அஞ்சும், பழியை அஞ்சும்,’
என  வரும்.  ‘கள்ளரின்  அஞ்சும்’ என்பது ‘கள்ளரின் மிக அஞ்சும்’
என்னும்  பொருண்மையையும்  தருமேனும், அப்பொருள் கொள்ளற்க.
‘கள்ளரான்  அஞ்சும்’  என்பதே  கொள்க.  இஃது உருபும் பொருளும்
மயங்கிற்று. (17) 

வேற்றுமை மயக்கம் தொன்னெறி பிழையாமை

102. அன்ன பிறவுங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:32:55(இந்திய நேரம்)