தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   584


ாருந்தி நிற்றலும் உடைய செய்யுளுள், எ-று. 

(எ-டு.)    ‘கடிநிலை இன்றே ஆசிரியர்க்கு’ (எ.389) ‘காவலோனக்
களிறஞ்  சும்மே’  ‘களிறு  மஞ்சுமக்  காவலோன’  ‘புரைதீர் கேள்விப்
புலவரான.’  என  வரும்.  ‘உள்ளம் போல உற்றுழி உதவும், புள்ளியற்
கலிமா  உடைமையான’ (கற். சூ.53) என்பது வினைக்குறிப்புக் காரணம்
பெற்றது. (25) 

எய்தியது விலக்கல்

110. அஎனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
குவ்வும் ஐயும் இல்லென மொழிப.
 

இஃது, எய்தியது விலக்கிற்று. 

(இ-ள்.)   குவ்வும் ஐயும் அஃறிணை மருங்கின் அ எனப் பிறத்தல்
இல்லென  மொழிப - குவ்வும் ஐயும் அஃறிணைப் பெயர்க்கண் அகரத்
தொடு சிவணி ஈறு திரிதல் இல்லை என்று சொல்லுவர் புலவர், எ-று. 

எனவே, ‘புள்ளினான’ என  அஃறிணைக்கண்  ஆன்  பிறக்குமாறு
ஆயிற்று. (26) 

நான்காவது ஏனையுருபுகளின் பொருளொடு மயங்கல்

111. இதன திதுவிற் றென்னுங் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும்
அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்கன் உருபின்
தொன்னெறி மரபின தோன்ற லாறே.
 

இது  நான்காவது  ஏனையுருபுகளின்  பொருள்களொடு   மயங்கும்
என்கின்றது.

(இ-ள்.)   இதனது  இது  இற்று என்னும் கிளவியும்-‘இப் பொருளி
னுடையது    இப்பொருள்;   அதுதான்   இத்தன்மைத்து,’   என்னும்
ஆறாவதன்       பொருண்மையும்,      அதனைக்      கொள்ளும்
பொருள்வயினானும்-ஒன்றனை     ஒன்று    கொள்ளும்    என்னும்
இரண்டாவதன்   பொருண்மையும்,   அதனான்   செயற்படற்கு  ஒத்த
கிளவியும்-ஒன்றனான்   ஒன்று   தொழிற்படற்கு   ஏற்கும்   என்னும்
மூன்றாவதன் பொருண்மையும், முறைக்கொண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:34:02(இந்திய நேரம்)