Primary tabs

்டு எழுந்த பெயர்ச் சொற் கிளவியும் - முறைப்பொருண்மையைக்
கொண்டு நின்ற பெயர்ச் சொல்லினது ஆறாம் வேற்றுமைப்
பொருண்மையும், பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்-நிலத்தை
வரைந்து கூறும் பொருண்மையும், பண்பின் கண் ஆம் பொருவுமாகிய
ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின் அறியும் வேற்றுமைக்
கிளவியும் - காலத்தின்கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப்
பொருண்மையும், பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும் -
பற்றுவிடும் பொருண்மையும் தீர்ந்து மொழிப் பொருண்மையும் ஆகிய
ஐந்தாவதன் பொருண்மையும், அன்ன பிறவும் நான்கன் உருபின்
தோன்றலாறு தொன்னெறி மரபின-அவை போல்வன பிறவும் நான்கன்
உருபிடத்துக் கூறுதலைப் பழைய நெறி முறைமையாக உடைய, எ-று.
(எ-டு.) யானைக்குக் கோடு கூரிது - இஃது ஆறாவது. இவட்குக்
கொள்ளும் இவ்வணி - இஃது இரண்டாவது. அவற்குச் செய்யத்தகுமக்
காரியம்-இது மூன்றாவது. ஆவிற்குக் கன்று-இஃது ஆறாவது.
கருவூர்க்குக் கிழக்கு-இஃது ஐந்தாவது. சாத்தற்கு நெடியன்-இதுவும்
அது. காலைக்கு வரும்-இஃது ஏழாவது. மனைவாழ்க்கைக்குப் பற்று
விட்டான்-இஃது ஐந்தாவது. ஊர்க்குத் தீர்ந்தான் - இதுவும் அது.
‘அன்ன பிறவும்’ என்றதனான், ஊர்க்கட்சென்றான், ஊர்க்கண் உற்றது
செய்வான், ஊரிற்சேயன் என்பனவற்றிற்கு நான்கனுருபு கொள்க. இது
தொகாது நின்றவிடத்து நான்கனுருபு சென்று மயங்குதலின், வேறு
கூறினார். (27)
நான்கனுருபு ஒழிந்தனவும் தம்முள் மயங்கல்
இது, நான்கனுருபு ஒழிந்தனவுந் தம்முள் மயங்கும் என்கின்றது.
(இ-ள்.)
ஏனை உருபும் அன்ன மரபின மானம் இல-நான்கன் உருபு
அல்லாத பிற உருபுந் தொகை அல்லாத தொடர்மொழிக்கண் ஒன்றன்
பொருளிற் சிதையாமல் ஒன்று மயங்குதற்கண் குற்றம் இல, சொல்
முறையான - வழக்கு மு