Primary tabs

ட குடமும், வனைதற்கு இடமாகிய நிலமும், அத் தொழில் நிகழுங்
காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலியனவும், அதனைக்
கொள்வானும், அவன் கொண்டதனாற் பெறும் பயனும் ஆகிய எட்டுக்
காரணத்தானுந் தொழில் நிகழ்ந்தவாறு காண்க. ஒழிந்த வினை கட்கும்
அவ்வாறு விரிக்க.
வினையை முன் வைத்தார், சொற்களையுந் தோற்றுவித்து, மேல்
நிகழுங் காரியத்திற்கு ஏனை ஏழினுஞ் சிறந்த காரணமாய் நிற்றலின்.
வினையுந் தொழிலும் வேறு என்பது இச்சூத்திரத்தான் உணர்தற்கு
‘வினை’ என்று எடுத்துத் ‘தொழின் முதனிலையே’ என முடித்தார்.
‘வனைந்தான்’ என்பது ‘குடத்தை வனைதலைச் செய்தான்’, என்று
பொருள் தந்துழிச் ‘செய்தான்’ என்றதன் தகரங் காலங் காட்டித்
தொழிலைத் தோற்றுவித்தவாறும், ‘வனை’ என்னும் வினை காலங்
காட்டாமல் நின்றவாறும், ‘வனைதல்’ என விரிந்துழியும் புடை
பெயர்ச்சி மாத்திரம் அன்றிக் காலங் காட்டாமல் நின்றவாறும் உணர்க.
காரியத்திற்கு யாண்டுங் காலங் காட்டும் எழுத்துக்களொடு கூடிய ‘செய்’
என்பதே வாசகம் என்று உணர்க. இக்காரிய வாசகம், இவ்வாறன்றி ஒரு
சொல் முழுவதும் தானாய் நிற்பனவும் உள. அவை, ‘கறைமிட
றணியலும் அணிந்தன்று.’ (புறம். 1:5) என்புழிக் ‘கறை மிடற்றை அழகு
பெறுதலையுஞ் செய்தது,’ எனவும், ‘இனியான் உண்ணலும் உண்ணேன்.’
(கலி 23:7) என்புழி ,‘இனி யான் சோற்றை உண்ணுதலையுஞ்
செய்யேன்,’ எனவும், *வாழ்தலும் வாழேன்,’ (கலி. 23:7) என்புழி,
‘இனியான் உயிரை வாழுதலையுஞ் செய்யேன்,’ எனவும் வந்தவற்றுள்
‘அணிந்தன்று, உண்ணேன், வாழேன்,’ என்பன முழுதும் காரிய
வாசகமாயே நின்றவாறு காண்க.
இனி, ‘வனைந்தான்’ என்பதன்கண் செய்வது எழுவாயாயும்,