தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   588


வினையுஞ்  செயப்படுபொருளும்   இரண்டாவதாயும்,  வினைமுதலுங்
கருவியும்  மூன்றாவதாயும் ஒருவன் ஏற்றுக்கொண்ட வழி. ‘இன்னதற்கு
இது பயன்’ நான்காவதாயும், நிலமுங் காலமும் ஏழாவதாயுஞ் சேர்ந்தன.
இன்னும், வனைந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்று நீங்குதல்
ஐந்தாவதாயும்,  அதனை  ஒருவன் ஏற்றுக்கொண்டவழி அஃது அவன்
உடைமையாதல்   ஆறாவதாயுஞ்  சேருமாறும்  உணர்க.  கருவிக்கண்
அடங்கும் ஏதுவும் ஐந்தாவதற்கு வரும். 

இங்ஙனம்  இவ்வுருபுகள்  இவ்வினைச்சொற்கண்  தோன்றுதல்பற்றி
இச்சூத்திரத்தை வினையியலிற் கூறாது ஈண்டுக் கூறினார். பெயர்நிலைக்
கிளவி’   (71)   ‘இரண்டாகுவதே’   (72)  என்னுஞ்  சூத்திரங்களானும்
இக்கருத்து உணர்க. (29) 

*(பாடம்) வாழலும் 

மேலதற்கு ஒரு புறனடை

114. அவைதாம்,
வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்.
 

இது, மேலதற்கு ஒரு புறனடை. 

(இ-ள்.)  அவைதாம்  -  மேல் கூறப்பட்ட தொழில் முதல்நலைகள்
தாம்,  வழங்கியல் மருங்கிற் குன்றுவ குன்றும் - (எல்லாத் தொழிற்கும்
எட்டும்   வரும்  என்னும்  யாப்புறவு  இல்லை)  வழக்கின்கண்  சில
தொழிலிற் குன்றத் தகுவன குன்றும், எ-று. 

குன்றத்தகுவன,  செயப்படுபொருளும்,   ‘இன்னதற்கு  இது  பயன்’
என்பனவுமாம். 

(எ-டு.) கொடி ஆடிற்று, வளி வழங்கிற்று, என வரும். (30) 

ஆகுபெயரின் இயல்பு

115. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய நாட்டு
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி.
 

இது, குறிப்பாற் பெருளுணர்த்தும்பெயர் இத்துணை என்கின்றது. 

(இ-ள்.)   முதலிற்   கூறும்   சினை  அறி  கிளவியும்-முதற்சால்
வாய்பாட்டான் கூறப்படும் சினைப்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:34:47(இந்திய நேரம்)