Primary tabs

தண்டூண் ஆதற்குக் கிடந்த மரத்தைத் ‘தண்டூண்’ என்றுங்
காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு இட்டு வழங்குவனவும், எழுத்து,
சொல், பொருள் என்பனவற்றிற்கு இலக்கணங் கூறிய அதிகாரங்களை
‘எழுத்து, சொல் பொருள்’ என்பன உணர்த்தி நிற்றலுங் கொள்க.
‘பிற’ என்னாது ‘வேறு’ என்றதனான், அவை ‘தொல்காப்பியம்,
கபிலம், வில்லி, வாளி’ என ஈறு திரிதலுங் கொள்க.
இவ்வாகுபெயர்கள் எழுவாய்வேற்றுமை மயக்கம் என்று உணர்க,
‘கடு’ என்பது தனக்கு உரிய முதற்பொருளை உணர்த்தாது சினைப்
பொருளை உணர்த்தலின். (35)
வேற்றுமை மயங்கியல் முற்றிற்று.