தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   604


னகார  ஈற்று   அளபெடைப்பெயர்  போல (137)  அளவு  நீண்டு
இயல்பாய் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.)  ‘மா அ அல்!  நின்  நிறம்போல்  மழையிருட்  பட்டதே,
கோஒஒள்!  கொளக்கோடு கொண்டு’ என்பதனுள் மாஅஅல்! கோஒஒள்!
என வந்தவாறு காண்க. (32) 

விரவுப்பெயர் விளி ஏற்குமாறு

152. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.
 

இது, விரவுப்பெயர் விளி ஏற்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  கிளந்த  இறுதி  அஃறிணை  விரவுப்பெயர்- மேல்  உயர்
திணைக்கண்  விளி  ஏற்கும் என்ற எட்டு ஈற்றிணையும் உடைய, உயர்
திணையோடு  அஃறிணை  விரவும்  விரவுப்பெயர்;  விளம்பிய நெறிய
விளிக்குங்காலை-அவ் வீறுகளின் எடுத்து ஓதிய முறைமையினையுடைய
விளிக்குமிடத்து. எ-று. 

(எ-டு.) சாத்தீ!  பூண்டே!  தந்தாய்!  எனவும்,  சாத்தா!  கூந்தால்!
மக்காள்! எனவும் வரும். சாத்தி! பூண்டு! தந்தை! சாத்த! என அண்மை
விளியுங் கொள்க. 

இனி,   ‘விளிக்குங்காலை’  என்றதனான்,  பிணா!  வாராய், அழிதூ!
வாராய்,   என  எடுத்தோதாத  ஆகார  ஊகார  ஈற்று  விரவுப்பெயர்
இயல்பாய்  விளி  ஏற்றலும், சாத்தன்! வாராய், மகள்! வாராய், தூங்கல்!
வாராய்  என  எடுத்தோதிய  ஈறுகள், கூறியவாறன்றி, இயல்பாய் விளி
ஏற்றலும், இப் பெயர்கள் ஏகாரம் பெற்றுச் சாத்தனே, மகளே, தூங்கலே
என விளி ஏற்றலும் கொள்க. 

உயர்திணையோடு அஃறிணை விரவுமாறு,‘அஃறிணை விரவுப் பெயர்
இயல்புமா ருளவே’ (எ.155) என்புழிக் கூறினாம். (33) 

அஃறிணைப்பெயர் விளி ஏற்குமாறு

153. புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉம் காலந் தோன்றின்
தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே.
 

இஃது, அஃறிணைப் பெயர் விளி ஏற்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:37:45(இந்திய நேரம்)