Primary tabs

குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) புள்ளியும் உயிரும் இறுதியாகிய - புள்ளியீறும்
உயிரீறுமாகிய, அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் -
அஃறிணையிடத்து வரும் எல்லாப் பெயர்களும், விளி நிலை பெறூஉம்
காலம் தோன்றின் - விளி கொள்ளும் காலந் தோன்றின், ஏகாரம் வரல்
தெளி நிலை உடைய - ஏகாரம் பெறுதலைத் தெற்றென உடைய, எ-று.
(எ-டு.) மரம் - மரமே! அணில் -அணிலே! புலி - புலியே! கிளி -
கிளியே! என வரும்.
‘தெளி நிலை உடைய’ என்றதனான்,
‘வருந்தினை வாழியென் னெஞ்சம்!’ (அகம். 19:2)
‘கருங்கால் வெண்குருகு! ஒன்று கேண்மதி.’ (நற்.54)
‘திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால்! (கலி.144)
என்றாற்போலப் பிறவாற்றான் விளி ஏற்பனவுங் கொள்க.
இனி உயர்திணைப் பெயருள் ஏகாரம் பெறாமல் விளி ஏற்று நின்றன
வற்றையும் வழக்குச் சொல்லான் தெரியப் பொருள்கூற வேண்டியக்கால்
இவ்வேகாரமே விரித்துக் கூறல் வேண்டுதலும் இதனாற் கொள்க.
‘தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ!
செல்வர் செல்வ! செருமேம் படுந’
(பெரும்பாண்.454-56)
‘பைம்பூண் சேஎய்!’ (பெரும்பாண்.458)
என்றாற் போல்வன ஏகாரத்தான் பொருள் கூறுமாறு உணர்க.
‘விளிநிலை பெறூஉம் காலம்
தோன்றின்’ என்றார்,
‘முன்னிலயாக்கலும் சொல்வழிப்படுத்தலும்’ (தொ.பொ.101) வேண்டுழிய
விளியேற்கும் என்றற்கு. (34)
மூவகைப் பெயரினும் சேய்மை விளி
154.
உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
அளபிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.
இது முற்கூறிய மூவகைப்பெயர்க்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வ