Primary tabs

குத்தது.
(இ-ள்.) உள எனப்பட்ட எல்லாப் பெயரும்-இரு திணைக்கண்ணும்
விளி ஏற்பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்குங்காலை
அளபு இறந்தன-விளிக்குமிடத்துத் தம் மாத்திரையின் இறந்து
இசைத்தன
வாம், சேய்மையின் இசைக்கும்
வழக்கத்தான-
சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கின்கண், எ-று.
(எ-டு.) நம்பீஇ! சாத்தாஅ! என வரும். சேரமா அன்! மலையமா
அன்! என்பன அளபிறந்து இசைக்கும்வழி இயல்பன்றி ஈற்று அயல்
நீண்டனவாம். (35)
‘அம்ம’ என்னும் இடைச்சொல் விளி
155.
அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறைப் பெயரொட சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.
இஃது, ‘அம்ம’ என்னும் இடைச்சொல் விளி ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் - அம்ம என்று
கூறப் படும் உரைப்பொருட் கிளவியினது நீட்டமாகிய நீட்டம்-அம்மா
என்னுஞ் சொல், அம்முறைப் பெயரொடு சிவணாது ஆயினும்-
முற்கூறிய விளி ஏற்கும் முறைமையினையுடைய பெயர்களொடு
பொருந்தாது இடைச்செல்லாய் நிற்பினும், விளியொடு கொள்ப
தெளியுமோரே - விளி ஏற்கும் பெயர்களோடு இதனையும் விளி
நிலைமைத்தாகக் கொள்வர் தெளிந்த அறிவினை உடையோர், எ-று.
(எ-டு.) ‘அம்மா கொற்றா!’ என வரும்.
‘கொற்றா!’ என்பதே எதிர்முகம் ஆக்கும் ஆயினும், ‘கேளாய்’
என்பதும் அதனொடு கூடி எதிர்முகம் ஆக்கி நின்றவாறு காண்க.
‘அம்ம கேட்பிக்கும்’ (278) எனவும், ‘அம்ம என்னும் உரைப்பொருட்
கிளவியும்’ (எழுத். 210) எனவும், ‘உரைப்பொருட் கிளவி நீட்டமும்
வரையார்’ (எழுத். 212) எனவும் ஆசிரியர் இதனைப் பொருள் தந்து
நிற்கும் என்றே சூத்திரஞ் செய்தலின், ஈண்டு ‘அசைச்சொல் நீட்டம்’
என்றதற்கு ‘யாவென் சினைமிசை