தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2305


காண்க. இதனுள்,

‘‘புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ
தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ.’’ 
                                       (கலி.108)

என்றவழி     எமரேவலான்   யாஞ்   செய்வதன்றி  யாங்கள்  ஏவ
நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றதில்லை என்றலின் வினைவல
பாங்கினாளாய தலைவி கூற்றாயிற்று.

‘‘யாரிவன்’’ என்னும் முல்லைக்கலியுள் (112),

‘‘வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல்
வழங்க லறிவா ருரையாரே லெம்மை
யிகழ்ந்தாரே யன்றோ வெமர்.’’              (கலி.112)

இதுவும் வினைவலபாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன்
கூறினது.

‘‘நலமிக நந்திய’’ என்னும் முல்லைக்கலியுள்.

‘‘பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழில்
அல்கல் அகலறை யாயமொ டாடி
முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை
யிரவுற்ற தின்னுங் கழிப்பி அரவுற்று
உருமி னதிருங் குரல்போற் பொருமுர
ணல்லேறு நாகுட னின்றன
பல்லா னினநிரை நாமுடன் செலற்கே.’’        (கலி.113)

இது     தாழ்த்துப்  போதற்குத்  தலைமையின்றிக்  கடிதிற்போகல்
வேண்டுமென்றமையானும்,     நல்லேறும்    நாகும்போல்    நாமுங்
கூடப்போகல்    வேண்டுமென்றமையானுந்,   தலைவன்   வினைவல
பாங்கினனாயின     னென்க.       வினைவல்லா       னென்னாது
பாங்கினென்றதனாற்றமரேவல்     செய்வது     பெறுதும்.     இஃது
அவ்வந்நிலத்து    இழிந்தோர்க்கு    எஞ்ஞான்றுந்    தொழிலேயாய்
நிகழுமென்றும்,   புனங்காவலும்   படுபுள்ளோப்புதலும்  இவ்வாறன்றி
உயர்ந்தோர்      விளையாட்டாகி      இயற்கைப்புணர்ச்சிப்பின்னர்ச்
சின்னாளிற்     றவிர்வரென்றும்      வேறுபாடுணர்க.     இக்கூறிய
இருதிறத்தோருந்  தமக்கு  உரியரன்மை  யான்  அறம் பொருளின்பம்
வழாமை    நிகழ்த்துதல்    அவர்க்கரிதென்பது    பற்றி   இவற்றை
அகப்புறமென்றார்.                                       (23)

தலைமக்களாதற்குச் சிறந்தாராவார்
 

24.
ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை யவரும் அன்னர்.
 

இது     முன்னர்ப்   ‘பெயரும்  வினையும்’   (20)  என்பதனுள்
திணைதொறுமரீஇய   பெயருந்  திணைநிலைப்பெயருமெனப்  பகுத்த
இரண்டனுள், திணைதொறுமரீஇய  பெயருட்  டலைவராதற் குரியாரை
அதிகாரப்பட்டமையிற்  கூறி,  அங்ஙனந்  தலைவராகத்  குரிமையின்
அடியோரையும்   வினைவலபாங்கினோரையும்   அதன்பிற்   கூறிப்,
பின்னர்  நின்ற  திணைநிலைப்  பெயராதற்குச் சிறந்தார் அறுவகைய
ரெனப் பகுக்கின்றது.

(இ-ள்) மரபின்-வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:58:18(இந்திய நேரம்)