Primary tabs

தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும்;
அன்னர் ஆகிய அவரும் - அம்மூவரையும் போற் பிறரை
ஏவிக்கொள்ளுந் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசராற்
சிறப்புப்பெற்றோரும்; ஏனோரும் - நால்வகை வருணமென்று
எண்ணிய வகையினான் ஒழிந்து நின்ற வேளாளரும்; உரியர் -
உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் எ-று.
ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.
எனவே, திணைநிலைப்பெயர்
அறுவகையாயிற்று. ‘வேந்து
விடுதொழிலிற்....பொருளே (637) என்பதனான் வேளாளரே அரசராற்
சிறப்புச்
செய்யப்பெறுவரென்றுணர்க.
இனி ‘வில்லும்
வேலுங்கழலு....முரிய’ (639) என்பதனான் ஏனோருஞ் சிறுபான்மை
சிறப்புப் பெறுவரென்றுணர்க. உரிப்பொருட்டலைவர்
இவரேயா
தலைத்தாம் மேற்பிரிவிற்குக் கூறுகின்றவாற்றானும் உணர்க.
‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே;
ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை’’
(கலி.52)
என வரும்.
‘‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.’’
(குறுந்.167)
இது குறுந்தொகை. இது
பார்ப்பானையும் பார்ப்பனியையுந்
தலைவராகக் கூறியது. கடிமனை சென்ற
சவிலி கூற்று.
வாயினேர்வித்தலுமாம்.
‘‘வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரியே ருண்கண்நீரும் நில்லா
தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழிந்த கோதை
பெய்வனப் பிழந்த கதுப்பும் உள்ளார்
அருள்கண் மாறலோ மாறுக அந்தில்
அறனஞ் சலரே ஆயிழை நமரெனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்
பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குவள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறெழுந்து முழங்கினு மாறெழுத்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர்வேட் டெழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி
மானடி மருங்கிற் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப
அமரகத் தட்ட செல்வந்
த