Primary tabs

வேந்தனென்று ஒருமையாற் கூறினார். ‘‘மெய்ந்நிலை மயக்கி னாஅ
குநவும்’’ (சொல்.449) என்னும் விதிபற்றி ‘சிவணிய’ வென்பதனை
வினையெச்ச மாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம். (27)
ஏனைப்பிரிவு இவையெனல்
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.
இது முறையானே தன் பகைமேற்சென்ற அரசன் திறை பெற்ற
நாடுகாத்து
அதன்கண் தன்னெறிமுறை அடிப்படுத்துதற்குப் பிரிதலும்
ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலுங் கூறுகின்றது.
(இ-ள்.)
முல்லை முதலாச் சொல்லிய மேவிய சிறப்பின் - தானே
சென்ற வேந்தன் தனக்கு முல்லை முதலாக முற்கூறப்பட்ட நால்வகை
நிலனுந் திறையாக வந்துபொருந்திய தலைமையானே; பிழைத்தது -
முன்னர் ‘ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்று’ நெறிமுறைமை தப்பிய
அந்நாடு; முறையாற் பிழையாதாகல் வேண்டியும் பிரிவே -
தன்னுடைய பழைய நாடுகளை ஆளும் நெறிமுறைமையினானே
தப்பாமல் ஆக்கம் பெறக் காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே;
ஏனோர் படிமைய இழைத்த ஒண்பொருள் முடியவும்
பிரிவே-முற்கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த வணிகர் தமக்கு
விரதங்களுடையவாக வேதநூலிற் கூறிய ஒள்ளிய பொருள் தேடி
முடியும்படி பிரிதலும் பிரிவே எ-று.
பிரிவை
இரண்டற்குங் கூட்டுக. சிறப்பிற் பிரிதலும் எனச் சேர்க்க.
சொல்லியவென்பதும் பிழைத்ததென்பதும் தொழிற்பெயர். முறையாற்
காக்கவென
முடிக்க. விரதமானவை ‘கொள்வதூஉம் மிகைகொளாது.
கொடுப்பதூஉம்
குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசல்’-
(பட்டினப்.209:11) முதலியன.
உ-ம்:
‘‘ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு
மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு
மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு
மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும்
ஆங்கத்
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக;
பல்வரி யின