Primary tabs

மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடு வராதலின்.
இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:-
‘‘நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை
கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர்
வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத்
தாளின்வாய் வீழ்த்தான் றலை.’’
இஃது உயிர்ப்பலி; இது
பொதுவகையான் இருவகை வெட்சிக்கும்
வஞ்சிக்கும் பொது.
‘‘ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை
பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய
தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த
தாளுழலை யடுவோன் றாள்.’’
இது குருதிப்பலி;
பொதுவகையான் இருவகை வெட்சிக்கும்
வஞ்சிக்கும் பொது.
புறத்திணை வழுஏழ் ஆவன
வெறியாட் டயர்ந்த காந்தளும், உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே யாரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவ ரேத்திய
ஓடாக் கழனிலை உளப்பட ஓடா
உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும்
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலுஞ்
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந்
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று
இருவகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங்
காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட வெழுமூன்றுதுறைத்தே
இது முன்
இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்குதற்
குரியபொதுநிலமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம்
பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின்
வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை
அகத்திற்கும்
புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற் கெல்லாம்
பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின.
(இ-ள்.)
வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங்
கடன்களை
அறியுஞ்