Primary tabs

பகைவன் எங்கோ’’ (பதிற்.6)
என்பதும் அது.
இரண்டு
நிலையாற் பொதுவுமாயிற்று.மன்னவன் வெற்றியே கருதாது
இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவு மாயிற்று.
மாயோன்
மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப்
பூவைநிலையும் என்றது: மாயோன் விழுப்புகழ் - மாயனுடைய காத்தற்
புகழையும், மேயபெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் - ஏனோர்க்கு
உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத
படைத்தல்
அழித்தலென்னும் புகழ்களையும்; மன்பூவைநிலையும்
மன்னர்
தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்;
என்றது ஒன்றனை
ஒன்றுபோற் கூறுந் துறை. ‘மன்’ எனப்
பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர்
முதலியோர்க்குங் கொள்க. ‘பெருஞ்சிறப்பு’ என்றதனான் படைத்தலுங்
காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன்
இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க.
உ-ம்:
‘‘ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளுங்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலி
னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு
மரியவு முளவோ நினக்கே...................’’
(புறம்.56)
என இதனுள் அங்ஙனம் உவமித்தவாறு காண்க.
‘‘குருந்த மொசித்தஞான்றுண்டா லதனைக்
கரந்த படி யெமக்குக் காட்டாய் - மரம்பெறாப்
போர்பிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட
மார்பிற் கிடந்த மறு’’
இது சோழனை மாயோனாகக் கூறிற்று.
‘‘ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு
மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா
மாற்றல்சால் வானவன் கண்’’
இது சேரனை அரனாகக் கூறிற்று.
‘‘இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக்
கோழியா னென்னின் முகனொன்றே கோதையை
யாழியா னென்றுணரற் பாற்று’’
இது சேரனைப் பல தேவராகக் கூறிற்று.
‘‘கோவா மலையாரங் கோத்த........’’
(சிலப். ஆய்ச். உள்வரி)