Primary tabs

‘‘முந்நீரி னுள்புக்கு மூவாக்........’’ (சிலப். ஆய்ச். உள்வரி)
‘‘பொன்னிமயக் கோட்டுப் புலி........’’
(சிலப். ஆய்ச். உள்வரி)
என்பனவும் அவை.
‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
.........சிறுகுடி யோரே’’
(கலி.52)
இஃது
உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம்
புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த
தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று.
‘தாவா’
என்றதனானே அரசர்புகழைக்
காட்டுவாழ்வோர்க்குக்
கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.
‘‘வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி
னாங்க ணோக்கா தாங்கு நீபோ
யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை
முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே
யஃதான்
றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு
வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே
யதனா
னதளுங் கோடு முதலிய கூட்டுண்
டிகலி னிசைமேஎந் தோன்றிப்
பலவா கியநில நீபெறு நாளே’’
இது முடியுங்
குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்
கூறியும் புகழ்மிகுத்தது.
‘‘பல்லிதழ்
மென்மலர்’’ என்னும் (109)
அகப்பாட்டினுள்
‘‘அறனில் வேந்த னாளும், வறனுறு குன்றம் பலவிலங் கினவே’’
எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார்.
ஆர் அமர்
ஓட்டலும் - குறுநில மன்னருங் காட்டகத்து வாழும்
மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும்;
உ-ம்:
‘‘பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற
லோச்சினன் றுரந்த காலை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே’’
(புறம்.308)
இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங்கண்டது.
‘‘கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றி
னாட்செருக் கனந்தார்த் துஞ்சு வோனே
யவனெம் மிறைவன் யாமவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும்