தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2376


நின்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
சென்றுவாய் சிவந்து மேல்வருக
சிறுகண் யானை வேந்துவிழு முறவே’’        (புறம்.316)

இது மறவன் ஆரமரோட்டல் கூறியது.

இவை தன்னுறுதொழில் கூறியன.

இவை புறம்.

ஆரமரோட்ட   லென்பது  பொதுப்படக்  கூறவே,   வேந்தர்க்கு
உதவியாகச் செல்வோரையுங் கொள்க.

உ-ம்:

‘‘வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப்
புள்ளூன்றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள்
ளூக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடி சீறூர்க்
குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற் பந்த
ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே’’       (புறம்.324)

இது புறம். வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.

‘‘இணைப்படைத் தானை யரசோ டுறினுங்
கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி
னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி
யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்’’           (கலி.15)

எனக் கலி அகத்தும் வந்தது.

‘‘வயங்குமணி பொருத’’ என்னும் (197) அகப்பாட்டினுள்.

‘‘சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்
ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்’’                     (அகம்.167)

எனச்    சாத்தெறிதலும்    அது    -   இங்ஙனம்   பொதுவாதலிற்
பொதுவியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.

ஆ     பெயர்த்துத் தருதலும். வெட்சிமறவர் கொண்ட நிரையைக்
குறுநிலமன்னராயினுங்     காட்டகத்து     வாழும்    மறவராயினும்
மீட்டுத்தருதலும்;

உ-ம்:

‘‘ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே’’   (புறம்.259)

இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.

‘‘வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:11:37(இந்திய நேரம்)