தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2377


னோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்லென வினவினை வரூஉம்
பாண கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந்
தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங்
கையுள போலுங் கடிதன் மையவே
முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லா
னிரையொடு வந்த வுரைய னாகி
யுரிகளை யரவின் மானத் தானே
யரிதுசெலுலகிற் சென்றன னுடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய விலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே
உயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே
மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
யிடம்பிறர் கொள்ளாச் சிறுநெறிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே’’       (புறம்.260)

இதுனுள்   ‘தன்னூ’ரென்றலிற்  குறுநில மன்னன் நிரைமீட்டுப்பட்ட
நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.

ஏனைய வந்துழிக் காண்க.

இனிக் கண்டோரும் மறவருங்  கூத்தரும்  பாணரும்  விறலியருங்
கூறினும், அவர்தாம் கையற்றுக் கூறினும், அத்துறைப் பாற்படும்.

உ-ம்:

‘‘பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாஅது
வண்டுமேம் படூஉம் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா மறவர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே’’ (புறம்.263)

இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.

‘‘விசும்புற நிவந்த’’ என்னும் (131) அகப்பாட்டும் அது.

இதனுள் ‘‘மறவர் நாளா வுய்த்த’’எனவேந்துறு தொழில் அல்லாத
வெட்சித்திணையும்  பொதுவியற்  கரந்தைக்கண்ணே  கொள்க;  இஃது
ஏழற்கும் பொதுவாகலின்.

‘தருத’     லென்ற   மிகையானே    நிரையல்லாத    கோடலும்
அத்துறைப்பாற்படும்.  ‘‘வலஞ்சுரி  மராஅத்து’’ (அகம்.83)  என்னுங்
களிற்றியானை நிரையுள்,

‘‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:11:48(இந்திய நேரம்)