தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2378


களிற்றுக்கன் றொழித்த வுவகையர் கலிசிறந்து
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுநொடை நல்லிற் புதவுமுதற் பிணிக்குங்
கல்லாஇளையர் பெருமகன் புல்லி’’

என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க.

இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க.

வேந்தன்  சீர் சால் சிறப்பு எடுத்து உரைத்தலும். வேந்தற்கு உரிய
புகழ்   அமைந்த  தலைமைகளை  ஒருவற்கு  உரியவாக  அவன்றன்
படையாளரும் பிறரும் கூறலும்;

இதுவும் வழு, வேந்தர்க்குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமையின்.

‘‘அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக்
காணிய சென்றஇரவன் மாக்கள்
களிற்றொடு நெந்தேர் வேண்டினுங் கடல
வுப்பொய் சாகாட் டுமணர் காட்டக்
கழிமுரி குன்றத் தற்றே
யெள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே’’    (புறம்.313)

இது புறம். படையாளர் கூற்று.

இதற்கு முடியுடை  வேந்தன்  சிறப்பெடுத்துரைத்தலென்று  கூறின்,
அது பொதுவியலிற் கூறுலாகா தென்றுணர்க.

தலைத்தாள்       நெடுமொழி      தன்னொடு    புணர்த்தலும்.
தன்னிடத்துளதாகிய        போர்த்தொழிலின்        முயற்சியானே
வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்;

உ-ம்:

‘‘தானால் விலங்காற் றனித்தாற் பிறன் வரைத்தால்
யானை யெறித லிளிவரவால் - யானை
யொருகை யுடைய தெறிவலோ யானு
மிருகை சுமந்துவாழ் வேன்’’

என வரும்.

‘‘பெருநீர் மேவற் றண்ணடை யெருமை
யிருமருப் புறழு நெடுமா நெற்றின்
பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக்
கன்றுடை மரையா துஞ்சுஞ் சீறூர்க்
கோளிவண் வேண்டேம் புரவே நாரரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநனி கெழீஇக் கம்பு ளீனுந்
தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே’’    (புறம்.297)

மடல்வன்     போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடு
புணர்த்தவாறு  காண்க.  சீறூர்  புரவாகக்  கொள்ளேன்;  தண்ணடை
கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான்.

இதுவும் பொது; புறம்

வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட
பிள்ளைநிலையும்.   தன்மேல்  வருங்  கொடிப்படையினைத்  தானே
தாங்குதல், வாட்டொழிலிற் பொய்த்தலின்றி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:11:59(இந்திய நேரம்)