தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2379


மாற்றோரைக்  கொன்று  தானும்  வீழ்தலென  இரண்டு  கூறுபட்ட -
போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்;

வேந்தன்     குடிப்பிறந்தோரும்  அவன்  படைத்தலைவருமாகிய
இளையர்    செய்யினும்   தன்னுறு   தொழிலாதலிற்   கரந்தையாம்;
தும்பையாகாதென்று உணர்க.

உ-ம்:

‘‘ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள்
கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு
காணா விளமையாற் கண்டிவதனோ நின்றிலனேன்
மாணாருள் யார்பிழைப்பார் மற்று’’

இது வருதார் தாங்கல்.

‘‘ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்
வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன்
வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே
கேளா வழுதார் கிடந்து’’

இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.

‘‘கெடுக சிந்தை கடிதிவ டுணிவே’’ என்னும் (279) புறப்பாட்டும்
இதன்பாற் படும்.

இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு.

வாண்மலைந்து    எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு
அருளிய    பிள்ளையாட்டும்    -    வாளாற்   பொருது  உயர்ந்த
அரசிளங்குமரனை   அந்   நாட்டிலுள்ளார்   கொண்டுவந்து   பறை
தூங்கிசையாக   ஒலிக்கும்படி   அவற்கு   அரசுகொடுத்த  பிள்ளைப்
பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்;

இதுவும்  நாட்டிலுள்ளார்   கொடுத்தலிற்   றன்னுறு   தொழிலாய்
வழுவுமாயிற்று.

உ-ம்:

‘‘வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட
புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக்
கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு
வான்கெழு நாடு வர’’

என வரும்.

இதனைப்  பிள்ளைத்தன்மையினின்று   பெயர்த்தலிற்   பிள்ளைப்
பெயர்ச்சியு மென்ப.

அனைக்குரி  மரபிற் கரந்தையும் - ஆரம ரோட்டல் முதிலிய ஏழு
துறைக்கும்   உரிய   மரபினையுடைய   கரந்தையும்;  கரந்தையாவது
தன்னுறு  தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின்
வெட்சித்திணை போல ஒழுக்கமன்று.

‘அந்தோவெந்தை’ என்னும் (261) புறப்பாட்டினுள்,

‘‘நாகுமுலை யன்னநறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் சூட்டி
நிரையிவட் டந்து’’

எ-று காண்க.

அது அன்றி - அக் கரந்தையே அன்றி;

காட்சி    -  கல்கெழு  சுரத்திற்  சென்று  கற்காண்டலும்,  அது
கொணர்ந்து  செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என
இருவகையாம்.

உ-ம்:

‘‘தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை. யாழிசூழ்
மண்டல மாற்றா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:12:11(இந்திய நேரம்)