தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3175


தந்து     ஒரு   பெயர்   கூறாது   வாளா   கூறினார்,  அப்பெயர்
உலகவழக்காய்  அப்பொருள்  உணர நிற்றலின். காலவுரிமை எய்திய
ஞாயிற்றுக்கு   உரிய   சிங்கவோரை  முதலாகத் தண்மதிக்கு  உரிய
கற்கடகவோரை  யீறாக  வந்து  முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின்,
அதனை  இம்முறையானே அறுவகைப் படுத்து, இரண்டு திங்கள் ஒரு
காலமாக்கினார்.  இனி  ஒரு  நாளினைப்  படுசுடரமையந் தொடங்கி
மாலையெனவும்,  அதன்பின் இடையாமமெனவும், அதன் பின் விடிய
லெனவும்,   அதன்பின்   காலை  யெனவும்,  அதன்  பின் நண்பக
லெனவும்,  அதன்பின்  எற்பாடெனவும்  ஆறாகப் பகுத்தார். அவை
ஒரோவொன்று   பத்து   நாழிகையாக  இம்முறையே சூத்திரங்களுட்
சிறுபொழுது  வைப்பர்.  பின்பனியும்  நண்பகலும் பிற்கூறிய காரணம்
அச்சூத்திரத்து கூறுதும்.

முல்லைக்குக்       காரும்       மாலையும்     உரியவாதற்குக்
காரணமென்னையெனின்,   பிரிந்து   மீளுந்   தலைவன்றிறமெல்லாம்
பிரிந்திருந்த   கிழத்தி  கூறுதலே  முல்லைப்  பொருளாயும்,  பிரிந்து
போகின்றான்    திறங்கூறுவனவெல்லாம்   பாலையாயும்   வருதலின்,
அம்முல்லைப்   பொருளாகிய   மீட்சிக்குந்   தலைவி   இருத்தற்கும்
உபகாரப்படுவது   கார்காலமாம்;   என்னை?   வினைவயிற்  பிரிந்து
மீள்வோன், விரைபரித்தேரூர்ந்து
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:41:42(இந்திய நேரம்)