தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3176


பாசறையினின்று     மாலைக்  காலத்து  ஊர்வயின்  வரூஉங் காலம்
ஆவணியும்  புரட்டாசியும்  ஆதலின்,  அவை  வெப்பமுந் தட்பமும்
மிகாது  இடை  நிகரவாகி  ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும்
நிழலும்  பயத்தலானும்,  ஆர்பதம்  மிக்கு  நீரும் நிழலும் பெறுதலிற்
களிசிறந்து,  மாவும்  புள்ளுந்  துணையோ  டின்புற்று விளையாடுவன
கண்டு  தலைவற்குந் தலைவிக்குங் காமம் குறிப்பு மிகுதலானுமென்பது.
புல்லை   மேய்ந்து  கொல்லேற்றொடு  புனிற்றாக்  கன்றை நினைந்து
மன்றிற்   புகுதரவும்   தீங்குழ  லிசைப்பவும்  பந்தர்முல்லை  வந்து
மணங்கஞற்றவும்   வருகின்ற   தலைவற்கும்  இருந்த  தலைவிக்குங்
காமக்குறிப்புச்     சிறத்தலின்,    அக்காலத்து   மாலைப்பொழுதும்
உரித்தாயிற்று.

இனிக்     குறிஞ்சியாவது  புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப்
புணர்ச்சி  முதலியனவாம்.  இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு
நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி
அரியளாக  வேண்டுமாகவே  அவ்வருமையை  ஆக்குவது ஐப்பசியுங்
கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமு மென்பது. என்னை?
இருள்தூங்கித்   துளி   மிகுதலிற்  சேறல்  அரிதாதலானும், பானாட்
கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:41:54(இந்திய நேரம்)