தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3189


விற்கும் பின்பனி உரித்தென்றலின்.

இனிக் கலத்திற்பிரிவிற்கு

உ-ம்:

‘‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக்
கோடுயர் திணிமண லகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய
ஆள்வினைப் புரிந்த காதலர் நாள்பல
கழியா மையி னழிபட ரகல
வருவர் மன்னாற் றோழி தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்மூ ராங்கட்
கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப்
பெருவன மலர அல்லி தீண்டிப்
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க
அறனின் றலைக்கு மானா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை யூருந் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே’’
   (அகம்.255)

இது தோழி  தூதுவிடுவது காரணமாக உரைத்தது. இம் மணிமிடை
பவளத்துப்   பின்பனி  வந்தவாறும்  நண்பகல்  கூறாமையும்  அவர்
குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க.

‘‘குன்ற வெண்மண லேறி நின்றுநின்று
இன்னுங் காண்கம் வம்மோ தோழி
களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’’

வருகின்றாரெனக்  கேட்ட  தலைவி  தோழிக்கு  உரைத்தது. இது
பின்பனி  நின்ற  காலம்  வரைவின்றி  வந்தது. கடலிடைக் கலத்தைச்
செலுத்துதற்கு உரிய காற்றொடு பட்ட காலம் யாதானுங் கொள்க.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:44:22(இந்திய நேரம்)