தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3292


ண்டைப் பல்லவ னாணையின்
வெட்சித் தாயத்து வில்லே ருழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரங்
கடந்து கொண்ட பல்லா னிரையே.’’

இது வேந்துவிடு தொழிற்கண்   வேந்தனைப்   பெயர்   கூறிற்று.
ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க.                     (54)

இயற்பெயர் புறத்திணையொடு பொருந்தி அகத்திணைக்கண்ணும்
வருதல்
 

55.
புறத்திணை மருங்கிற் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.
 

இது     புறத்திணக்குத்   தலைவர்  ஒருவராதலும்,   பலராதலும்
உரிப்பொருட்குத்   தலைவர்   பலராகாமையுங்   கூறலின்,  எய்தாத
தெய்துவித்து எய்தியது விலக்கிற்று.

(இ-ள்.)     அகத்திணை  மருங்கிற் பொருந்தின் - ஒருவனையும்
ஒருத்தியையும்  விதந்து  கூறும்  இயற்பெயர்  அகத்திணைக்கண்ணே
வந்து  பொருந்துமாயின்;  புறத்திணை  அளவுதல் மருங்கின் அல்லது
இல  -ஆண்டும்  புறத்திணை கலத்தலிடத்தின் அல்லது வருதலில்லை
எ-று.

எனவே,   புறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவம மாயும்
அகத்திணையுட்   கலக்குமென்பதூஉம்  இதனானே  விரித்தாராயிற்று.
அளவுமெனவே   ஒரு   செய்யுட்கண்ணும்  அப்  புறத்திணையாகிய
இயற்பெயர்களுஞ்   சிறப்புப்பெயர்களும்   ஒன்றேயன்றிப்   பலவும்
வருதலுங்    கொள்க.   ஒருவரென்பது   அதிகாரப்   பட்டமையின்,
அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்றுதல் கொள்க.

உ-ம்: ‘‘வண்டுபடத்   ததைந்த’’ என்னும் அகப் பாட்டினுள் (1)
‘‘முருக  னற்போர்  நெடுவே  ளாவி.........’யாங்கண்’’    எனவே
புறத்திணைத் தலைவன் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும், அவன் நிலக்
கருப்பொரு ளாய் அகத்திற்கு  வந்தவாறும்,  உரிப்பொருட்  டலைவன்
ஒருவனே யானவாறுங் காண்க. ‘‘எவ்வியிழந்த வறுமையர்  பாணர்,
பூவில்   வறுந்தலை  போலப்  புல்லென்று’’
  (குறுந்.19)  என்பது
கருப்பொருளுவமமாய் வந்தது.

‘‘கேள்கே டூன்றவும்’’ என்னும் அகப்பாட்டுப்  (93) புறத்திணைத்
தலைவர் பலராய் அகத்திணை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:03:58(இந்திய நேரம்)