தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3293


க்கண்  அளவ  வந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர்  அளவி வரும்
என்பதனானே, ‘‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை  துவைப்பவும்’’
என்னும்   (158)  புறப்பாட்டு ‘‘எழுவர்  மாய்ந்த  பின்றை’’  எனப்
புறத்திணைத்  தலைவர்  பலராய்  வந்தது. பிறவும் இவ்வாறு வருவன
இதனான் அமைக்க.

இன்னும் இதனானே அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைக்கும்
இப்பன்மை சிறுபான்மை கொள்க.

உ-ம்:

‘‘ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு
முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு.’’
            (கலி.101)

‘பொருந்தின்’  எனவே, தானுந் தன்னொடு பொருந்துவதூஉம் என
இரண்டாக்கிச்,  சார்த்துவகையான்  வரும் பெயர்க்குங் கொள்க. நாடக
வழக்கினுளது   முன்னர்ச்   சூத்திரத்துட்   காட்டினாம்.   பெயர்கள்
பலவாதலின் ‘இல’ வெனப் பன்மை கூறினார்.                 (55)

முதலாவது அகத்திணையியற்கு
மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த
காண்டிகையுரை முடிந்தது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:04:09(இந்திய நேரம்)