தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3758


க்கா
ணேர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழியூஉ
நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள்
பூப்போ லுண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே.’’
(ஐங்குறு.101)

இஃது  அறத்தொடுநின்றபின் வரைதற்குப் பிரிந்தான்  வரைவொடு
வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. இது நெய்தலிற் குறிஞ்சி.

‘‘கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே’’
      (ஐங்குறு.122)

‘‘கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
வுண்ணாப் பாவை யூட்டு வோளே.’’
       (ஐங்குறு.128)

இவை பெதும்பைப்  பருவத்தாள்  ஒரு  தலைவியொடு  வேட்கை
நிகழ்ந்தமையைத்   தலைவி   கூறித்   தலைவன்   குறிப்புணர்ந்தது.
இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.

‘‘யானெவன் செய்கோ பாணவா னாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே.’’
  (ஐங்குறு.133)

இது   தலைவன் புறத்துப்போன  அத்துணைக்கு  ஆற்றாயாகுதல்
தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது.

இப் பத்தும் நெய்தற்கண் மருதம்.

‘‘வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போ னெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்ச நேர்கல் லேனே.’’ 
        (ஐங்குறு. 151)

இது  வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி  வாயின் மறுத்தது.
இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.

‘‘இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே
புலம்புகொண் மாலை மறைய
நலங்கே ழாக நல்குவ ளெனக்கே.’’
        (ஐங்குறு.197)

இடந்தலைப்பாட்டிற்  றலைவி  நிலைகண்டு  கூறியது. இது நெய்தலிற்
புணர்த னிமித்தம்.

‘‘வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்
தண்ணக மண்ணளை நிறைய நெல்லி
னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்’’
  (ஐங்குறு.30)

இது தோழி அறத்தொடு நின்றது.

‘‘பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சு

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:33:09(இந்திய நேரம்)