தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3759


மனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தைகை வேலே.’’  
      (ஐங்குறு.60)

இது தோழி இரவுக்குறி மறுத்தது.

‘‘நெறிமருப் பெருமை நீலஇரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.’’
     (ஐங்குறு.91)

இஃது இளையள் விளைவில ளென்றது.

‘‘கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்மூர் வருது
மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே’’

                                     (ஐங்குறு.92)

இது  நின்  தமர்  வாராமையின்  எமர்  வரைவு  நேர்ந்தில  ரென்று
தோழி கூறக் கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது.

இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.

இக்  காட்டியவெல்லாம்   ஐங்குறுநூறு.  ‘‘புனையிழை நோக்கியும்’’
என்னும் மருதக் கலியும் (கலி.76) அது.

‘‘முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்
மூதா தின்றல் அஞ்சிக் காவலர்
பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
காஞ்சியி னகத்தக் கரும்பருத்தி யாக்குந்
தீம்புன லூர திறவ தாகக்
குவளை யுண்க ணிவளும் யானுங்
கழுநீ ராம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத் தலைப்பப்
பொய்த லாடிப் பொலிகென வந்து
நின்னகாப் பிழைத்த தவறோ பெரும
கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித்
தணிமருங் கறியாள் யாயழ
மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே’’ 
  (அகம்.156)

இது  தலைவியைத்   தோழி  யிடத்துய்த்துத் தலைவனை வரைவு
கடாயது. இவ்வகப்பாட்டும் அது.

இன்னும்,  ‘மயக்குறுதலும்’ என்றதனான் அவ்வந் நிலங்கட்கு உரிய
முதலுங்  கருவும் வந்து உரிப்பொருள் மயங்குவனவுங் கொள்க. அஃது
‘‘அயந்திகழ்  நறுங்கொன்றை’’  (கலி.150)  என்னும்  நெய்தற்  கலியுட்
காண்க. இக்கருத்தானே நக்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:33:20(இந்திய நேரம்)