Primary tabs

ம்; அன்ன - முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டுதலைக்கழிந்த
காலத்தை உடைய எ-று.
என்றது,
முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண்
நிகழ்ந்தாற் போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு.
மழைகூர் காலத்துப் புறம் போந்து விளையாடு தலின்மையின்
எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அதுதான் இன்பஞ்
செய்யாமையானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி
நிகழுமென்று இச்சூத்திரம்.
முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்ததென்றது,
இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக்
காலமென்றுணர்க.
அது,
‘‘பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே’’
(குறுந்.72)
என வரும்.
இக்குறுந்தொகையுட்
குரீஇ யோப்புவாள் கண்ணெண வழி நிலைக்
காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின்
அத்தினைக்கதிர் முற்றுதற்கு
உரிய இளவேனிலும் பகற்பொழுதுங்
காட்சிக்கண் வந்தன. ‘‘கொங்கு
தேர் வாழ்க்கை’’ என்பதும் இளவேனி
லாயிற்று; தும்பி கொங்கு
தேருங்காலம்
அதுவாதலின்.
கலத்தலுங் காட்சியும்
உடனிகழுமென்றுணர்க. கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல்
உள்ளப்புணர்ச்சியேயாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்த
கொள்ளுமென்றுணர்க.
(16)
முதற்பொருள் யாண்டும் இருவகைத்தாதல்
இது
முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும்
இவ்வாற்றானுரிய வென்கின்றது.
(இ-ள்)
முதல் எனப் படுவது - முதலென்று கூறப்படும் நிலனும்
பொழுதும்; அஇரு வகைத்து - அக்கூறியவாற்றான் இருவகைப்படும்
யாண்டும் எ-று.
இது ‘கூறிற்றென்ற’ லென்னும் உத்திவகை. இதன்பயன் முதல் இரண்