Primary tabs

டுவகை என்றவாறாம்.
தமக்கென நிலனும் பொழுதும் இல்லாத
கைக்கிளையும் பெருந்திணையும்
நிலனில்லாத பாலையும் பிறமுதலொடு
மயங்கினவேனும் அவை மயங்கிய
நிலனும் பொழுதும் அவ்வத்
திணைக்கு
முதலெனப்படுமென்பதாம். இது முன்னின்ற
சூத்திரத்திற்கும் ஒக்கும்.
(17)
கருப்பொரு ளிவையெனல்
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப.
இது
நிறுத்தமுறையானேயன்றி
அதிகாரப்பட்டமையின்
உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுத னுதலிற்று.
(இ-ள்)
தெய்வம் உணாவே மா மரம் புள் பறைசெய்தி யாழின்
பகுதியொடு தொகைஇ - எல்லாத் திணைக்குந் தெய்வம்
உணா
விலங்கு மரம் புள் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே
கூட்டி; அவ்வகை பிறவும் கருஎன மொழிப - அவைபோல்வன
பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
யாழின்
பகுதி என்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை
யாழென வேறு வருதல் கொள்க. ‘அவ்வகை பிறவும்’ என்றதனான்
எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும்
உள; அவை ‘மாயோன்மேன’ (5) என்புழிக் காட்டினாம். இதனானே
பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று. இன்னும் ‘அவ்வகை’
என்றதனானே, பாலைக்கு நிலம் பற்றாது காலம்பற்றிக் கருப்பொருள்
வருங்காற் றம்மியல்பு திரிய வருவனவும் வருமென்று கொள்க. ‘எந்நில
மருங்கிற் பூ’ (19) என்பதனாற் பூவும் புள்ளும் வரைவின்றி
மயங்குமெனவே ஒழிந்த கருவும் மயங்குமென்பது ‘சூத்திரத்துட்
பொருளன்றியும்’ (659) என்பதனான் உரையிற் கொள்க. அது
‘‘அயந்திகழ் நறுங்கொன்றை’’ (150) என்னும் நெய்தற்கலியுட் காண்க.
முல்லைக்கு
உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்; மா, உழையும்
புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள்,