தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3776


நீர்நீத்த வறுஞ்சுனை
யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன’’
       (கலி.3)

இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது.

‘‘கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத்
தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க
வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்’’
                         (கலி.27)

இது    குறிஞ்சிக்குப்  பயின்ற  மயில்  பாலைக்கண்  இளவேனிற்
கண்வருதலிற்  பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய பெருங்
குறிஞ்சியில்    (குறிஞ்சிப்.)   வரைவின்றிப்  பூமயங்கியவாறு  காண்க.
பிறவும்  இவ்வாறு  மயங்குதல்  காண்க.  ஒன்றென  முடித்தலாற் பிற
கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க.

திணைப்பெயரும் திணைநிலைப்பெயரும் இருவகையாதல்
 

20.
பெயரும் வினையுமென் றாயிரு வகைய
திணைதொறு மரீஇய திணை நிலைப் பெயரே.
 

இது ‘பிறவு’(18) மென்றதனாற் றழுவிய பெயர்ப் பகுதி கூறுகின்றது.

(இ-ள்.)     திணைதொறும் மரீஇய பெயர் - நால்வகை நிலத்தும்
மரீஇப்போந்த     குலப்பெயரும்;     திணைநிலைப்    பெயர்   -
உரிப்பொருளிலே நிற்றலையுடைய பெயரும்; பெயரும் வினையுமென்று
அஇருவகைய - பெயர்ப்பெயரும் வினைப்பெயருமென்று அவ்விரண்டு
கூற்றையுடையவாம் எ-று.

நால்வகை      நிலத்தும்      மருவிய      குலப்பெயராவன:-
குறிஞ்சிக்குக்கானவர்  வேட்டுவர் இறவுளர் குன்றவர் வேட்டு வித்தியர்
குறத்தியர் குன்றுவித்தியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும்  உணர்க.
முல்லைக்குக்   கோவலர்  இடையர்  ஆயர்  பொதுவர்  இடைச்சியர்
கோவித்தியர்  ஆய்ச்சியர்  பொதுவியர்.  நெய்தற்கு நுளையர் திமிலர்
பரதவர்  நுளைத்தியர்  பரத்தியர்; ஏனைப் பெண் பெயர் வருமேனும்
உணர்க. மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைசியர்;
ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க.

முன்னர்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:36:36(இந்திய நேரம்)