Primary tabs

‘வந்த நிலத்தின்பயத்த’
என்புழிக் காலத்தையும் உடன் கோடலின்
ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழுதொடு மருவுதலும்
பெறப்படுதலிற் பொழுது முதலாக
வரும் பாலைக்குத் திணைதொறு
மரீஇய பெயருந் திணைநிலைப்பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் எனவும், மீளி விடலை காளை எனவும் வரும்.
இனி
உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப்பெயரும்
நாடாட்சிபற்றிவரும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன்
பொருப்பன், கொடிச்சி; இஃது ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை
யென்றதனாற் கொள்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல்
குறும்பொறை நாடன், மனைவி. நெய்தற்குக் கொண்கன் துறைவன்
சேர்ப்பன் மெல்லம்புலம்பன். தலைவிபெயர் வந்துழிக் காண்க.
மருதத்திற்கு மகிழ்நன்
ஊரன், மனையோள் எனவரும். இக் காட்டிய
இருவகையினும்
பெயர்ப்பெயரும் வினைப்பெயரும் பாடலுட் பயின்ற
வகையாற் பொருணோக்கியுணர்க.
ஈண்டுக்
கூறிய திணைநிலைப்பெயரை ‘ஏவன் மரபின்’ (24)
என்னுஞ் சூத்திரத்து அறுவகையரெனப் பகுக்குமாறு ஆண்டுணர்க.
(20)
திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைமக்களாய்
வழங்குவாரும் உண்மை
ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே.
இது முன்னர்த் திணைதொறு மரீஇய பெயருடையோரினுந்
திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென
முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்துவித்தது.
(இ-ள்)
ஆடூஉத் திணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய
திணைதொறும் மரீஇய பெயர்களுள்; ஆயர் வேட்டுவர் வரூஉங்
கிழவரும் உளர் - ஆயரினும் வேட்டுவரினும் வருங் கிழவரும் உளர்,
ஆவயின் (வரூஉங் கிழவியரும் உளர்) - அவ்விடத்து வருந்
தலைவியரும் உளர் எ-று.
ஆயர் வேட்