Primary tabs

‘பெயரும் வினையும்’
(20) என்பதனுள் திணைதொறுமரீஇய
பெயருந்
திணைநிலைப்பெயருமெனப்
பகுத்த இரண்டனுள்,
திணைதொறுமரீஇய பெயருட் டலைவராதற் குரியாரை
அதிகாரப்பட்டமையிற் கூறி, அங்ஙனந் தலைவராகத் குரிமையின்
அடியோரையும் வினைவலபாங்கினோரையும் அதன்பிற் கூறிப்,
பின்னர் நின்ற திணைநிலைப் பெயராதற்குச் சிறந்தார் அறுவகைய
ரெனப் பகுக்கின்றது.
(இ-ள்)
மரபின்-வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல்
ஆகிய
நிலைமையவரும் - பிறரை ஏவிக்கொள்ளுந் தொழில் தமக்குளதாகிய
தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும்; அன்னர்
ஆகிய
அவரும் - அம்மூவரையும் போற் பிறரை ஏவிக்கொள்ளுந்
தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசராற் சிறப்புப்பெற்றோரும்;
ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணிய வகையினான்
ஒழிந்து நின்ற வேளாளரும்; உரியர் -
உரிப்பொருட் டலைவராதற்கு
உரியர் எ-று.
ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.
எனவே,
திணைநிலைப்பெயர் அறுவகையாயிற்று. ‘வேந்து
விடுதொழிலிற்....பொருளே (637) என்பதனான் வேளாளரே அரசராற்
சிறப்புச்
செய்யப்பெறுவரென்றுணர்க.
இனி ‘வில்லும்
வேலுங்கழலு....முரிய’ (639)
என்பதனான் ஏனோருஞ் சிறுபான்மை
சிறப்புப்
பெறுவரென்றுணர்க. உரிப்பொருட்டலைவர்
இவரேயா
தலைத்தாம் மேற்பிரிவிற்குக்
கூறுகின்றவாற்றானும் உணர்க.
‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே;
ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை’’
(கலி.52)
என வரும்.
‘‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினி