Primary tabs

தெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.’’
(குறுந்.167)
இது குறுந்தொகை.
இது பார்ப்பானையும் பார்ப்பனியையுந்
தலைவராகக்
கூறியது. கடிமனை
சென்ற செவிலி கூற்று.
வாயினேர்வித்தலுமாம்.
‘‘வருதும் என்ற நாளும் பொய்த்தன
அரியே ருண்கண்நீரும் நில்லா
தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழிந்த கோதை
பெய்வனப் பிழந்த கதுப்பும் உள்ளார்
அருள்கண் மாறலோ மாறுக அந்தில்
அறனஞ் சலரே ஆயிழை நமரெனச்
சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும்
பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குவள் வாழிய நெஞ்சே விசும்பின்
ஏறெழுந்து முழங்கினு மாறெழுத்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்
போர்வேட் டெழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி
மானடி மருங்கிற் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப
அமரகத் தட்ட செல்வந்
தமர்விரைந் துரைப்பக் கேட்கும் ஞான்றே’’
(அகம்.144)
மீண்டவன்
நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.
இம்
மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனாயினவாறுந்
தான் அமரகத்து
அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற் குரியாள்
அரசமரபின் தலைவியே என்பதூஉம் உணர்க.
‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ.’’
(கலி.31)
இதனுள் வேந்தன்
தலைவனாயினவாறும் வகைகொண்ட
தலைமையின் அழகை நுகரவிரும்பினாள் என்றலிற் றலைவியும்
அவ்வருணத்தாளாயவாறும் உணர்க. ‘‘உலகுகிளர்ந்தன்ன’’ என்னும்
அகப்பாட்டுள் (255) வாணிகன் தலைவனாகவுங் கொள்ளக்
கிடத்தலிற்றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க.
‘‘தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூ