தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3803


தோழி  தேஎத்து  மெனப்  பொதுப்படக்  கூறியவதனான்  தோழியை
வெகுண்டு கூறுவனவுங் கொள்க.
  

‘‘வரியணி பந்தும் வாடிய வயலையு
மயிலடி யன்ன மாக்குர னொச்சியுங்
கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத்
தமியே கண்டதண் டலையுந் தெறுவர
நோயா கின்றே மகளை நின்றோழி
யெரிசினந் தணிந்த இலையி லஞ்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொ டெள்விளி
யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி
யிலங்கிலை வெள்வேல் விடலையை
விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே’’ 
(நற்.305)

என வரும்.  

‘‘இதுவென் பாவைக் கினியநன் பாவை
யிதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
யிதுவென் பூவைக் கினியசொற் பூவையென்
றலம்வரு நோக்கி னலம் வருஞ் சுடர்நுதல்
காண்டொறுங் காண்டொறுங் கலங்க
நீங்கின ளோவென் பூங்க ணோளே’’     
(ஐங்குறு.375)

இவ் வைங்குறுநூறு தேடிக் காணாது வந்தாரைக்   கண்டு  புலம்பியது.  

இனி அவ்வழியாகிய கிளவிகளுட்சில வருமாறு:-  

‘‘ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள்
இனியே,
தாங்குநி னவல மென்றனி ரதுமற்
றியாங்கன மொல்லுமோ வறிவுடையீரே
யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமக ளாடிய
மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே’’    
(நற்.184)

இந் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது.  

‘‘கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி
தாதெரு மறுகின் மூதூ ராங்கண்
எருமை நல்லான் பெருமுலை மாந்தும்
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணியிழந் தழுங்கின்று தாயும்
ஈன்றோள் தாராய் இறீஇய ரென்னுயிரெனக்
கண்ணு நுதலு நீவித் தண்ணெனத்
தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத்
தாழிக் குவளை வாடுமலர்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:41:48(இந்திய நேரம்)