Primary tabs

சூடித்
தருமணற் கிடந்த பாவையென்
அருமக ளேயென முயங்கின ளழுமே’’
(அகம்.165)
இம்
மணிமிடைபவளத்துத் தாய்
நிலையும் ஆய்த்து நிலையுங்
கண்டோர்
கூறியவா றுணர்க.
‘‘மாண்பில்
கொள்கையொடு மயங்குதுயர் செய்த
வன்பி லறனு மருளிற்று மன்ற
வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி
பெருமட மான்பிணை யலைத்த
சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே’’
(ஐங்குறு.394)
இவ்
வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித்
தாய் சுற்றத்தார்க்குக்
காட்டியது.
‘‘நும்மனைச்
சிலம்பு கழீஇ யயரினு
மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வென்வேன்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’
(ஐங்குறு.399)
இவ்
வைங்குறுநூறு தலைவன் மீண்டு
தலைவியைத் தன்
மனைக்கட்
கொண்டுவந்துழி அவன்தாய்
சிலம்புகழீஇ நோன்பு
செய்கின்றாளெனக்
கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும்
வந்தார்க்குக்
கூறியது.
இன்னுஞ் சான்றோர்
செய்யுள்களுள் வேறுபட வருவனவெல்லாம்
இதனான்
அமைக்க.
சேரியுஞ் சுரத்தும்
தேடிச் செல்லும் தாயரும் உண்மை
37.
ஏமப்
பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்
தாமே செல்லுந் தாயரும் உளரே.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி.
(இ-ள்.) ஏமப் பேர்ஊர்ச் சேரியும் சுரத்தும். பதியெழு வறியாப் பேரூரிற் றெருவின்கண்ணும் அருவழிக்கண்ணும்; தாமே செல்லும் தாயரும் உளர். தந்தையுந் தன்னையரும் உணரா முன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் எ-று.
உம்மை
எண்ணும்மை. தாயரெனப் பன்மை
கூறித்
தாமே
யெனப் பிரித்தனாற் சேரிக்கு நற்றாய்
சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய்
சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தவென்றுணர்க.
உ-ம்:
‘‘வெம்மலை யருஞ்சுர
நம்மிவ ணொழிய
விருநில முயிர்க்கு மின்னாக் கானம்
நெருநற் போகிய பெருமடத் தகுவி
யைதக லல்குற் றழையணிக் கூட்டுங்
கூழை நொச்சிக் கீழ தென்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலுங் காணிரோ கண்ணுடை யீரே’’
(அகம்.275)
வண்டலைக்
காணார் தேஎத்து நின்று காணில்
ஆற்றீரெனக்
கூறினமையின் ஆயத்திற்கன்றி
இற்புறஞ் சென்று சேரியோர்க்கு
உரைத்ததாயிற்று.
‘‘நிலந்தொட்டுப்
புகாஅர் வான மேறார்
பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார்