Primary tabs

ன் வரூஉம் யானைக்
கயிற்றுபுறத தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரிவானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி யியவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.’’
(அகம்.128)
இரவுக்குறிக்கட்
சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பாளாக
உரைத்தது. இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது.
நிலனும்
பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்;
வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன்
சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது
கூதிர்யாமம் என்பதற்கும் ஒக்கும்.
(6)
குறிஞ்சிக்கு முன்பனியு முரித்தெனல்
இஃது
எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு
முன்பனியும் உரித்தென்றலின்.
(இ-ள்)
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி
முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது
ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற
யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க.
உ-ம்:
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலை
(அகம்.125)
என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.
மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய
சிறுபொழுதும்
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.
(இ-ள்)
வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும்
மருதமாதலும்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்-
எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் எ-று.
வைகுறுதலும் விடியலும்
என்னும் உம்மை தொக்கு நின்றது.
செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல வைகுறுதலை
வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமமுங் கழியுந்துணை
அக்கங்குல் வைகுறுதல். அது கங்குல் வை