தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4918


டிறத்தலுஞ் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே
மறவல் ஓம்புமதி எம்மே நறவின்
சேயிதழ் அனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையு மலிர்கொள் ஈரிமை
உள்ளகங் கனல உள்ளுதோ றுலறிப்
பழங்கண் கொண்ட கதழ்ந்துவீழ் அவிரறல்
வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச்
சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப்
பூவீ கொடியிற் புல்லெனப் போகி
யடர்செய் ஆயகல் சுடர்துணை யாக
இயங்காது வதிந்தநங் காதலி
யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே’’      (அகம்.19)

இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று.

‘‘அறியாய் வாழி தோழி யிருளற
விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும்
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதல ரென்றி நீயே’’             (அகம்.53)

இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.

‘‘வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’’.     (குறுந்.21)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:15:16(இந்திய நேரம்)