Primary tabs

போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து.’’
இவை கண்டோர் கூற்று.
பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற்
பாதீடாயிற்று; வேந்தனேவலாற் றாங்கொண்ட நிரையைப்
பகுத்துக்கோடலும், மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும்,
நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக்
கொடுத்தலும்;
உ-ம்;
‘‘ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் ‘‘யாமே பகுத்திடல் வேண்டா வினநிரை
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை’’
(புற.வெ.வெட்சி.14)
தாமே தமரை யறிந்தனகொ - லேமுற
வன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச
சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து.’’
(பெரும் பொருள்
விளக்கம்.புறத்திரட்டு.1250.நீரைமீட்சி.8)
இவற்றுள்
முன்னையது கண்டோர் கூற்று; ஏனையது மறவர்
கூற்று. உண்டாட்டு - நிரைகொண்டார்தாங்கொண்ட
உ-ம்;
பாத்துத்தாங் கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து
விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரை மீட்ட கொற்றத்தான்
உண்டாடுதலும்;
‘‘நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மி
னொன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னிலும் பெருஞ்சா யலரே’’
(புறம்.262)
இது புறம்.
‘‘பகைவர் கொண்ட படுமணி யாய
மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின்
முழவுத் துயின்மறந்த மூதூ ராங்கண்
விழவுத் தலைக்கொண்ட விளையாட் டாயத்
தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர்
மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே
கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு
நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே
காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப்
பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே
சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய
வாடுறு நறவின் சாடி தோறுங்
கொள்வினை மாற்றாக் கொடையொடு
கள்விலை யாட்டியுங் கைதூ வாளே.’’
இவை கண்டோர் கூற்று.
கொடை
- தாங் கொண்ட நிரையை இரவலர்க்கு
வரையாது
கொடுத்து மனகிழ்தலும், நிரைமீட்டோர்