Primary tabs

பலைக்
கொள்ளை மேவலை யாகலின்’’
எனவும் வரும்.
இவை கொற்றவள்ளைப்
பொருண்மையவேனும் உட்பகுதி பலவுந்
துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும்
உதாரணமாயின.
வயங்க லெய்திய
பெருமையானும் - ஒருவர் ஒருவர் மேற்
செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாய
வழி அவர் விளக்கமுற்ற பெருமையும்;
உ-ம்; ‘‘மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம்
பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ்
மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து
வெண்மதிபோன் மேம்பட்டான் வேந்து’’
என வரும்.
இஃது இருவருக்கும் பொது.
கொடுத்தல்
எய்திய கொடைமையானும் - மேற்செல்லும் வேந்தர் உ-ம்; ‘‘வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும்,
பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்
தொழிலும்;
தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி
யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த
படைக்கலத்திற் சாலப் பல.’’
என வரும். ‘
தூவெள் ளறுவை மாயோற் குறுகி
யிரும்புட் பூசலோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ
னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத்தன்றலை
மணிமருண் மாலை சூட்டி யவன்தலை
யொருகாழ் மாலை தான்மலைந் தனனே.’’
(புறம்.291)
என்பதும் அது.
அடுத்து
ஊர்ந்து அட்ட கொற்றத்தானும் - எடுத்துச் சென்ற இரு உ-ம்; ‘‘நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத்
பெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும்
தாம் ஏறி அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற
கொற்றமும்;
தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக்
கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து
முனைப்புல மருங்கி
னினைப்பருஞ் செய்வினை
வென்றியது முடித்தனர்