தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5016


மாதோ
யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே’’

என வரும்.

‘‘யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி
னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்’’
 
        (பதிற்றுப்.15)

என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற்படும்.

மாராயம்    பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப்பெய்திய
அதனாற்   றானேயாயினும்   பிறரேயாயினுங்   கூறும்  மீக்  கூற்றுச்
சொல்லும்;

சிறப்பாவன  ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் ஊரும்
முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேண்டியவாறு செய்க
என்றது.  இஃது  அப்படைக்கு  ஒருவனைத்  தலைவனாக்கி  அவன்
கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது.

உ-ம்;

‘‘போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாந்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்.’’

இது பிறர் கூறிய நெடுமொழி.

‘‘துடியெறியும் புலைய
வெறிகோல் கொள்ளு மிழிசின
கால மாரியி னம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம்புனை யோடை

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:34:20(இந்திய நேரம்)