தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5017


யண்ணல் யானை
யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு
மோடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந்
தண்ணடை பெறுதல் யாவது படினே
மாசின் மகளிர் மன்ற னன்று
முயர்நிலை யுலகத்து நுகர்ப வதனால்
வம்ப வேந்தன் றானை
யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே.’’
        (புறம்.287)

இது    தண்ணடை பெறுகின்றது சிறிது; சுவர்க்கம் பெறுதல் நன்று
என்று  நெடுமொழி  கூறியது. போர்க்களம் புக்கு நெடுமொழி கூறலும்
ஈண்டு அடக்குக.

பொருளின்று    உய்த்த பேராண் பக்கமும் - பகைவேந்தரை ஒரு
பொருளாக  மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும்
பகுதியும்;

உ-ம்;

‘‘மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை யெறித லொன்றோ
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சித்
துடிய னுண்க ணோக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்
வேறிரித் திட்டு நகுதலு நகுமே.’’
 
    (தகடூர் யாத்திரை)

இஃது  அதிகமானாற்  சிறப்பெய்திய  பெரும்பாக்கனை  மதியாது
சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.

‘‘பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
வமரி னிட்ட வருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே
முரசுமுழங்கு தானைநும் அரசு மோம்புமி
னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
எனை நாட் டாங்குநும் போரே யனைநா
ளெறியா ரெறிதல் யாவண தெறிந்தோ
ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனா
லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலமென் றி

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:34:31(இந்திய நேரம்)