Primary tabs

உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும்; அகத்தோன் தன்
படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன்
படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த
வினை முதிர்ச்சியும்;
உ-ம்:
‘‘கடல்பரந்து
மேருச்சூழ் காலம்போற் சென்றோர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர்
தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார்
மான்றேரான் மூதூர் வரைப்பு’’
இது புறத்தோன் முற்றிய முதிர்வு.
‘‘ஊர்சூழ் புரிசையுடன்சூழ் படைமாயக்
கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர்
மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன்
றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து’’
இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.
அன்றி
முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற
மதிலிலன்றி
உள்மதிற்கட் புறத்தோனான் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின
மதில்காவலும்; அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த
புறத்தோன் போர்செய்தலை விரும்பிய
உள்ளத்தைக் காத்தலும்;
நொச்சியாவது
காவல். இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க;
அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக்
காத்தலுமென இருவர்க்கு
மாயிற்று. இக்கருத்தானே