தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5036


துங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ்
வான்றோய் புரிசை பொறியு மடங்கின
வான்றோ ரடக்கம்போ லாங்கு’’

             (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.
                                  எயில்கோடல்8)

இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.

‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத்
தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க
ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா
ரடிபிறக் கீடு மரிது’’

       (தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7)

இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.

நீர்ச்   செரு  வீழ்ந்த  பாசியும்  - கொண்ட மதிலகத்தை விட்டப்
போகாத  புறத்தோரும்  அவரைக்   கழியத்  தாக்கல் ஆற்றாத அகத்
தோரும்  எயிற்புறத்து  அகழின்  இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த
நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்;

‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார்.

உ-ம்:

‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய்
நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல்
வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர்
நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’

இஃது இருவருக்கும் ஒக்கும்.

வேறு வேறு வருமெனினுங் காண்க.

அதா  அன்று  ஊர்ச்  செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற்
புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;

பாசியென்றார், நீரிற் பாசிபோல  இருவரும்  ஒதுங்கியும்  தூர்ந்தும்
பொருதலின்.

உ-ம்:

‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய்
நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா
னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’

இது புறத்தோன் பாசிமறம்.

‘‘தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:38:12(இந்திய நேரம்)