Primary tabs

ந்தானென் னேறு’’ (புறப். பொருள். 176)
என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன.
கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கையாயிற்று.
‘‘வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச்
சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல்
வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்
பாய்ந்தன மேன்மேற் பல.’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1350.அமர் 6)
இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை.
‘‘பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார்
குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி
கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே
மண்ணெமதே மண்ணெமதே வென்று.’’
இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை.
இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவும் படாது;
திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும்
படாது; ஆயினுந்
துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க.
(16)
தும்பை பன்னிரு துறைத்து
ஆதல்
நோனா ருட்கு மூவகை நிலையும்
வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன்
தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவ னொருவனை யுடைபடை புக்குக்
கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப்
பாழி கொள்ளு மேமத் தானுங்
களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரு மொழியாத் தொகை நிலைக்கண்ணுஞ்
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன்மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
இது மைந்து
பொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை
இனைத்தென்கிறது.
(இ-ள்.)
தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை
நிலையும் -
தானைநிலை யானைநிலை குதிரைநிலை
என்று
சொல்லப்பட்ட போர்செய்தற்கு
ஆற்றா அரசர் தலைபனிக்கும் மூன்று
கூறுபாட்டின்கண்ணும்;
நோனார் உட்குவரெனவே
நோன்றார் உட்காது நிற்பா