Primary tabs

த விசும்பி
னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே’’
இப்பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க.
ஒருவற்குப்
பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய
நூழிலும் - அங்ஙனம்
நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற்
கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின் அவரைக் கோறல்
புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற்
றடிந்து கொன்று
குவித்தற் கண்ணும்;
வஞ்சத்தான்
தன் வேந்தனைக் கொன்றமைபற்றித்
தனக்குக்
கெட்டோரையும் அடங்கக்
கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப்
பெற்றோனென்றார்.
நூழிலாவது கொன்று குவித்தல்,
‘‘வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழிலாட் டோதை’’
(பத்துப். மதுரைக்.255-257)
என்றாற் போல.
உ-ம்:
‘‘அறத்திற் பிறழ வரசெறிந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்
செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே
பல்படையார் பட்ட படி’’
என வரும்.
புல்லித் தோன்றும்
பன்னிரு துறைத்தே. பொருந்தித் தோன்றும்
பன்னிரு
துறையினை யுடைத்துத் தும்பைத்திணை எ-று.
இன்னும், உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து
எனவுங் கூட்டிப் பன்னிரண்டுடன் கண்ணும் முற்கூறிய
வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின்
அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு
துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள்
கொள்க.
பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால், ஏனைத்
திணைக்கட் கூறனாற் போல, ஒன்று நிகழ்ந்தபின் ஒன்றுநிகழாது
இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத்திணை
நிகழுமென்றற்குப் ‘புல்லித் தோன்றும்’ என்றார். பல்பெருங் காதமாகிய
நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் உலகம் துறை யென்பது
போல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதி
காட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல் வருகின்ற
திணைகட்கும்
ஒக்கும்.
(17)
வாகை பாலையது புறனாதல்
இவ் வாகைத்திணை
பாலையெனப்பட்ட அகத்திணைக்குப்
புறனாமென்கின்றது.
(இ-ள்.)
வாகை தானே - இனிக் கூறாதுநின்ற.
புறத்திணையுள்
வாகையெனப்பட்டது தானே;
பாலையது புறனே. பாலையென்னும்
அகத்திணைக்குப் புறனாம்
எ-று.
என்னை? பாலைக்குப் புணர்ச்சியின்
நீங்கி, இல்லறம் நிகழ்த்திப்
புகழெய்துதற்குப்
பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின்
நீங்கி